இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்துக்கு சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை பணியாளர்கள் 46 பேர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த 46 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த இவர்கள், தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இலங்கைக்கு திரும்புவதாக குவைத்தில் இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் 2000க்கும் மேற்பட்ட இலங்கை பணியாளர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக குவைத் அரசின் உள்துறை அமைச்சருடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் விளைவாக இந்த இலங்கையர்கள் தற்காலிக விமான அனுமதிப்பத்திரத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
