Our Feeds


Saturday, July 29, 2023

SHAHNI RAMEES

வீட்டில் மரணித்தவரை அவசரமாக அடக்கம் செய்வது பற்றி பிரதமருடன் ACMF பேச்சு....!

 




வீட்டில் ஏற்படும் ஜனாஸாக்களை அவசரமாக நல்லடக்கம்

செய்வது சம்பந்தமாக 


முஸ்லிம்கள் தமது வீடுகளிலேயே மரணிக்கும் நபர்களை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக அகில இலங்கை மஸ்ஜித்கள் சம்மேலனம் (ACMF) 2023 ஜூன் 5 ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை சந்தித்து.


மேற்படி விவகாரம் தொடர்பாக பிரதமரின் கீழ் வரும் பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில்  முறைப்பாடு ஒன்றை சமர்பித்தது.


கடந்த பல மாதங்களாக இலங்கை முஸ்லிம் சமூகம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதோடு, COVID-19 தொற்று நோய்களின் போது அமைக்கப்பட்ட பல நெறிமுறைகள் காரணமாக தொற்று நோய்க்குப் பிந்தைய காலத்திலும் தத்தமது வசிப்பிடங்களுக்குள் நிகழும் இறப்புகளை அந்தந்த கிராம சேவகர் உத்தியோகத்தரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும், அருகிலுள்ள பொலிஸ் கிளையிற்கு அறிவிக்க வேண்டும் போன்ற விடயங்களினால் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு  இறந்தவர்களின் குடும்பங்கள் மிகவும் கஷ்ட துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. 


அதே நேரம் இஸ்லாமியக் கோட்பாட்டின் படி முஸ்லீம்களின் ஜனாஸாக்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள்  அடக்கம் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.


எனவே தேசிய முஸ்லிம் பேரவையின் (NMA) ஆலோசனையின் கீழ், தலைவர் (ACMF) அஸ்லம் உத்மான் மற்றும் K.R.A. சித்தீக், பிரதித் தலைவர் (ACMF) பிரதமர் அவர்களை சந்தித்து இந்த விவகாரத்தில் வெற்றிகரமான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.


அதனடிப்படையில்  இறப்பிற்கான காரணம் மற்றும் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழின் சரியான மற்றும்  பொருத்தமான ஆவணங்கள் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் மேற்படி ஜனாஸா அடக்கம் செய்வதற்கும் மேலும் இறந்து  7 நாட்களுக்குள் இறப்பு சான்றிதழ் பெறமுடியும் என்ற வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் பேரியல் இஸ்மாயில் அஷ்ரப் மற்றும் தேசிய முஸ்லிம் பேரவையின் உப தலைவர் அப்சல் மரிக்கார் ஆகியோர் இந்த விடயம் தொடர்பாக ACMF க்கு ஆலோசனை வழங்குவதில் மிக முக்கிய பங்கினை வழங்கியுள்ளார்.


முஸ்லீம்களுக்கு மட்டுமின்றி இலங்கையின் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்க முடிவு  என ACMF தலைவர் அஸ்லம் உத்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இலங்கையர்களாகிய நாங்கள் எங்கள் உறவினர்களை, குறிப்பாக அவர்கள் வயதானவர்களாகவும், உடல் நலக்குறைவாகவும் இருக்கும் போது அவர்களைப் பராமரிப்பதற்காக வளர்க்கப்பட்டவர்கள்.  மரணம் ஏற்பட்டால், குடும்பங்கள் அந்தந்த மத மற்றும் மார்க்க  நம்பிக்கைகளின் படி இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு எந்த இடையூறும் அல்லது தாமதமும் இல்லாமல் தமது காரியங்களை விரைவாகச் செய்ய இந்த அறிவிப்பு உதவுகின்றது என்றும் கூறினார்கள். 


தகவல் 

K.R.A. Siddeek 

பிரதி தலைவர் ACMF

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »