Our Feeds


Saturday, July 29, 2023

SHAHNI RAMEES

அங்கொடை மரணம் – மேலுமொருவர் கைது..!


 

அங்கொடையில் உள்ள தேசிய மனநல வைத்தியசாலையில்

நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நபரும் வைத்தியசாலை ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

 

முன்னதாக, சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மனநல சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய நபர், இம்மாதம் 25ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்ததன் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.


மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை தொடங்கியுள்ளது. தொடர்ந்து விசாரணையின் ஒரு பகுதியாக மருத்துவமனை இயக்குநர், துணை இயக்குநர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »