Our Feeds


Thursday, July 6, 2023

SHAHNI RAMEES

முத்துராஜாவுக்கு பதில் தாய்லாந்தில் இருந்து மூன்று பறவைகள்..!

 

 இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மூன்று "டபுள் வாட்டில்ட் காசோவரி" (Double Wattled Cassowary) பறவைகள் அனுப்பப்பட்டன.

 

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 9 மாத வயதுடைய இரண்டு ஆண் காசோவரி பறவைகளும் ஒரு காசோவரி குஞ்சும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

சுமார் 05 அடி உயரமும் சுமார் 60 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த cassowary பறவைகள் உலகின் மிக மோசமான பறவைகளில் இரண்டாவது பெரிய பறவைக் குழுவைச் சேர்ந்தவை. மிகவும் வண்ணமயமான இந்த பறவைகள் வானில் பறக்க முடியாது என்பது இதன் சிறப்பு.

 

இந்த விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து பல வகையான பாம்புகள் தாய்லாந்துக்கு அனுப்ப தயார் செய்யப்பட்டுள்ளது.

 

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட காசோவரி பறவைகளை வரவேற்பதற்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் தம்மிகா தசநாயக்க, மிருகக்காட்சிசாலையின் அசோக ஜயலத், மிருக பராமரிப்பாளர் அசங்க பெர்னாண்டோ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலைய விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »