Our Feeds


Tuesday, July 11, 2023

SHAHNI RAMEES

நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம்

 

அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் இன்று(11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.

 

அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக, தர்க்கத்தில் ஈடுபட்ட போது. அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக்கூடாது என எச்சரித்து அவரை அங்கிருந்து அகற்றினார்.

 

இதனால் கொதிப்படைந்த வீரசேகர அண்மையில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

இதன் அடிப்படையிலேயே இன்று அவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்



பாறுக் ஷிஹான்




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »