வெல்லவாய பிபிலஹெல பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் பரவிய தீயினால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீப்பரவல் நேற்று சனிக்கிழமை (08) பரவத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ பரவலால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
குறித்த பகுதியில் இந்த நாட்களில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது.
