Our Feeds


Tuesday, July 11, 2023

SHAHNI RAMEES

சரத் வீரசேகரவின் பேச்சுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கில் இன்று சட்டத்தரணிகள் போர்க்கொடி

 


வட மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்

இன்று முன்னிலையாகாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதென வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.




முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பெளத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பெளத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அண்மையில் சென்றிருந்தார்.




அப்போது தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டினார். அரசியல்வாதிகள் நீதிமன்ற விசாரணையில் மூக்கை நுழைக்கக் கூடாது என எச்சரித்து வீரசேகரவை அங்கிருந்து நீதிபதி அகற்றினார்.




இதனால் கொதிப்படைந்த வீரசேகர, அண்மையில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியிருந்தார்.




இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்க வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், இன்று காலை 9.30 மணிக்கு வடக்கிலுள்ள சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு எதிரில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபடவுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »