Our Feeds


Friday, July 7, 2023

ShortNews

ட்விட்டர் நிறுவன இரகசியங்களை திருடி த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது - மெட்டாவுக்கு எதிராக ட்விட்டர் வழக்கு



த்ரெட்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 


ட்விட்டர் சார்பாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.


ட்விட்டர் நிறுவன இரகசியங்களை திருடியதாக த்ரெட்ஸ் மீது ட்விட்டர் முறைப்பாடு வைத்துள்ளது. ட்விட்டர் செயலியை காப்பி அடித்து த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.


ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ புதன்கிழமை மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு இது குறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.


அதில்  ''ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை முறையான அனுமதி இன்றி வேண்டுமென்றே சட்டத்திற்குப் புறம்பாக தவறாகப் பயன்படுத்தியதாக நம்புகிறோம்.அதனால் உங்கள் மீது வழக்கு தொடுக்க இருக்கிறோம்.


மெட்டா டசின் கணக்கான முன்னாள் ட்விட்டர் ஊழியர்களை பணியமர்த்தியது எங்கள் செயலியை பிறந்து செய்துள்ளது. ட்விட்டரின் வர்த்தக இரகசியங்கள் மற்றும் பிற இரகசியமான தகவல்களை மெட்டா நிறுவனத்திற்கு வழங்கி உள்ளனர். சிலர் ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் போதே இந்த தகவல்களை மெட்டா நிறுவனத்திற்கு வழங்கி, அதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை கொப்பி அடித்து த்ரெட்ஸ் செயலியை உருவாக்கியுள்ளனர்.


ட்விட்டர் தனது அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாக்கும் விதமாக வழக்கு தொடுக்க விரும்புகிறது. ட்விட்டர் வர்த்தக இரகசியங்கள் அல்லது பிற இரகசியமான தகவல்களைப் பயன்படுத்துவதை நிறுத்த மெட்டா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று அந்த கடிதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் செய்துள்ள போஸ்ட்டில் '''போட்டி என்பது சரியானதுதான்.. ஆனால் கொப்பி அடிப்பது தவறானது'' என்று கூறியுள்ளார். 


மார்க் ஸுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் த்ரெட்ஸ் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. இன்ஸ்டகிராம் செயலியின் கிளை செயலியாக இந்த புதிய சமூக வலைத்தளம் த்ரெட்ஸ் செயல்படும்.


ட்விட்டரை முந்துகிறதா?


 ட்விட்டர் நிறுவனம் போலவே தோற்றம் கொண்ட த்ரெட்ஸ் சிறிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்யும் தளமாக இயங்க உள்ளது. இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2 மில்லியன் பயனாளர்களை கடந்து உள்ளது. தற்போது 30 மில்லியன் பயனாளர்களை கடந்து த்ரெட்ஸ் நிறுவனம் சென்று கொண்டு இருக்கிறது. ட்விட்டரில் 368 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.


அதே சமயம் இன்ஸ்டகிராமில் 2.35 பில்லியன் யூசர்கள் உள்ளனர். இந்த இன்ஸ்டகிராம் யூசர்கள் மொத்தமாக அதன் கிளை நிறுவனமான த்ரெட்ஸ் செயலிக்கு வந்தால் த்ரெட்ஸ் செயலி ட்விட்டரை ஒரே வாரத்தில் முந்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த த்ரெட்ஸ் செயலிக்கு வரிசையாக பயனாளர்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில்தான் அதன் லோகோ மக்கள் இடையில் கவனம் பெற்றுள்ளது.


ஏன் சிக்கல்?: சமீபத்தில் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. இதையடுத்துதான் தற்போது போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் விதிகளில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு நிலையில் பெரும்பாலான யூசர் த்ரெட்ஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது.


இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று ட்விட்டரில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.


இதனால் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ட்விட்டர் விதிகளில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு நிலையில் பெரும்பாலான யூசர் த்ரெட்ஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இந்த புதிய சமூக வலைத்தளம் த்ரெட்ஸ் செயல்படும்.


ட்விட்டர் நிறுவனம் போலவே தோற்றம் கொண்ட த்ரெட்ஸ் சிறிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்யும் தளமாக இயங்க உள்ளது. இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2 மில்லியன் யூசர்களை கடந்து உள்ளது. தற்போது 8 மில்லியன் யூசர்களை கடந்து த்ரெட்ஸ் நிறுவனம் சென்று கொண்டு இருக்கிறது. ட்விட்டரில் 368 மில்லியன் யூசர் உள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »