Our Feeds


Saturday, July 8, 2023

SHAHNI RAMEES

சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு...!

 

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



எனவே நாளை அல்லது திங்கட்கிழமை பணியில் சி.டி.விக்ரமரத்னவின் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



சி.டி.விக்ரமரத்ன 2020 நவம்பர் 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றார் மற்றும் மார்ச் 26 ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தார். ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பு ஜூன் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.



இந் நிலையில் அவருக்கு மேலும் மூன்று மாதங்கள் சேவை நீடிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »