Our Feeds


Saturday, July 8, 2023

SHAHNI RAMEES

இந்தியாவின் எந்த இடத்திலும் விளையாட தயார் - பாகிஸ்தான் அணித்தலைவர்

 

13-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகின்ற ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.



இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பங்காளதேஷ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.



போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் போட்டிகள் இடம்பெறுகின்றது.



இதற்கிடையே பாகிஸ்தான் அணி பங்கேற்கும் சில போட்டி இடங்களை மாற்றுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.



ஒக்டோபர் 20 ஆம் திகதி பெங்களூருவில் நடை பெறும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி 23 ஆம் திகதி சென்னையில் நடைபெறும் ஆப்கானிஸ் தானுக்கு எதிரான போட்டிகளின் மைதானங்களை மாற்றுமாறு வலியுறுத்தியது. 



ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் சபை நிராகரித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் பாபர் ஆசம் வழங்கிய பேட்டியில் கூறியதாவது:-



இந்தியாவில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட பாகிஸ்தான் அணி தயாராக இருக்கிறது. 



உலக கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெறுவது பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. ஒட்டு மொத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஐ.சி.சி. பட்டத்தை வெல்ல வேண்டுமானால் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். அதில் கவனம் செலுத்துவோம்.



பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். வர இருக்கும் போட்டிகளின் முழு அட்டவணையும் எங்களிடம் உள்ளது. 



போட்டிகளில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இப்போட்டிகளுக்காக வீரர்கள் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். 



உலக கிண்ண போட்டி எங்கு நடந்தாலும் அங்கு நாங்கள் விளையாட வேண்டும். எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர் கொள்ள உற்சாகமாக இருக்கிறோம். 



பாகிஸ்தான் அணி தனது பலம் மற்றும் போட்டியை நடத்தும் நாடுகளின் நிலைமையை மனதில் கொண்டு ஆசிய கிண்ணம் மற்றும் உலக கிண்ணத்திற்கான திட்டங்களை வகுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »