ஏகத்துவ அமைப்புகளின் சமூக சேவைகள் மற்றும்
பிரச்சாரப்பணிகள் வேகமெடுக்க வேண்டும் - ஷராப்தீன் அறிக்கை."ஏகத்துவ அமைப்புகளின் தடை நீக்கப்பட வேண்டுமென முதலில் ஏகத்துவவாதியாகவும், ஜனாதிபதியின் கட்சியான ஐ.தே.க வின் உறுப்பினர் என்ற வகையிலும் நான் செய்த முயற்சிகளுக்கும் பலன் கிடைத்துள்ளது என்பதில் பெறு மகிழ்ச்சியடைகிறேன்" என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அடக்குமுறைகளில் ஒரு அங்கமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கையில் ஜனநாயக முறையில் செயல்பட்டு வந்த ஏகத்துவ பிரச்சார அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஏகத்துவ பிரச்சாரத்தை வீரியமாகவும், சமூகப்பணிகளை வேகமாகவும் முன்னெடுத்து வந்த தவ்ஹீத் அமைப்புகள் இரத்த தானம் உள்ளிட்ட மனித நேயப்பணிகளில் முன்னனியில் இருந்த நிலையிலேயே தடை விதிக்கப்பட்டு செயல்பாடுகள் மொத்தமாக முடக்கப்பட்டன.
இந்த நிலையில் கோட்டாவின் வெளியேற்றத்தின் பின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரனில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்றைய தினம் தடை செய்யப்பட்டிருந்த 5 தவ்ஹீத் அமைப்புகளின் தடைகளை நீக்கி வர்த்தமானி அறிவிப்பை விடுத்துள்ளார்கள்.
குறித்த அமைப்புகளின் தடை நீக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதியுடனும் சாகல ரத்னாயக உள்ளிட்டவர்களுடனும் பல தடவைகள் எடுத்துக் கூறினேன். என்னால் முடிந்த முயற்சிகளை இறைவனுடைய மார்க்கத்திற்காகவும், நான் ஒரு ஏகத்துவவாதி என்ற அடிப்படையிலும் முழுமையாக செய்தேன் - அல்ஹம்து லில்லாஹ்
மேலும் இன்றைய ஜனாதிபதி பிரதமராக பொறுப்பேற்றிருந்த போது இத்தடை அசாதாரணமான ஒன்று என தான் சுட்டிக் காட்டிய போது தடை செய்யப்பட்டுள்ள இவ்வியக்கங்கள் தீவிரவாதத்துடன் சப்பந்தமே இல்லாத இயக்கன்ன்கள் என தான் அறிந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி தன்னிடம் குறிப்பிட்டதாகவும் அவர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்படுவதற்கு முன்னால் செயல்பட்டதை விட இன்னும் வீரியமாக கொள்கை பிரச்சாரத்தை மேற்கொள்வதுடன் இன,மத வேறுபாடுகளில்லாமல் அனைவருக்குமாக இவ்வமைப்புகள் மூலம் கிடைக்கப்பெற்ற அனைத்து உதவிகளும், வளங்களும் தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கும் அதே வேலை ஏகத்துவ அமைப்புகள் ஜனநாயக முறையில் செயல்பட்டு முழு உலகுக்கும் தாம் குற்றமற்றவர்கள் என்பதை எடுத்தியம்பிவிட்டார்கள் என்பதையும் மகிழ்வுடன் இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
