பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக குவைத்தில் சிறைச்சாலையில்
உள்ள 143 இலங்கையர்களில் 115 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இன்று (28) தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு நேற்று (27) குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரிடம் ஒன்றரை கிலோ ஐஸ் மற்றும் 500 கிராம் ஹெரோயினைக் கண்டுபிடித்ததாகவும், குறித்த நபர் 2019 இல் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த நபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து 2016ஆம் ஆண்டு குவைத்தில் வீட்டு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளதாகவும், அவரது கடைசி வேண்டுகோளுக்கு இணங்க அவரது சடலம் எப்பாவளையிலுள்ள அவரது தாயாரின் இல்லத்தில் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.