பிரான்சில் புகழ்பெற்ற பாண் தயாரிப்பாளரான யாழ்ப்பாணத்தை
சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இலங்கை வந்துள்ளார்.யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இலங்கைக்கான மூன்று வார பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தனது இரு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் அவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்த தர்ஷன் செல்வராஜா 2011 ஆம் ஆண்டு நாட்டில் பாண் பேக்கரி கடையொன்றை ஆரம்பித்துள்ளார்.
பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் Grand Prix de la Baguette de Traditional Francaise de la Ville De Paris (பிரத்தியேக பாண் தயாரிக்கும் போட்டி) நிகழ்வில் கலந்து கொண்டு முதலாவது இடத்தை தர்சன் செல்வராஜா வென்றிருந்தார்.
30 வது முறையாக பேரிஸில் இடம்பெற்றிருந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கை பேக்கரி உரிமையாளர் என்ற பெருமையையு பெற்றிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஒரு வருடத்திற்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிடைத்திருந்தது.