Our Feeds


Wednesday, July 12, 2023

SHAHNI RAMEES

சிறுவர்களிடையே தீவிரமடையும் அம்மை..!

 



நாட்டில் இந்த நாட்களில் சிறுவர்களிடையே அம்மை

நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.


நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டிபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல் மற்றும் சிவப்பு கொப்பளங்கள் ஆகியவை அடங்கும் என்றும் இந்த நோயின் ஆபத்துகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »