ஜா எல – பமுனுகம – வெலிகம்பிடிய பகுதியில், 59 ஆயிரம்
கிலோகிராமுக்கும் அதிக எடை கொண்ட கழிவுத் தேயிலையுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, 59 ஆயிரத்து 875 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
தெமட்டகொட பகுதியை சேர்ந்த 47 வயதுடைய சந்தேகநபர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர், மேலதிக விசாரணைகளுக்காக பமுனுகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
