Our Feeds


Monday, July 10, 2023

ShortNews

இத்தாலியில் நீரில் மூழ்கி தந்தை - மகன் உயிரிழப்பு!



தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகள் இத்தாலியின் ட்ரெபியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இத்தாலிய ஊடக அறிக்கைகளின்படி, இந்த சம்பவம், கடந்த சனிக்கிழமை பிற்பகல், ரொண்டனேரா கடற்கரைக்கு அருகிலுள்ள டோன்செட்டோ பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 59 மற்றும் 28 வயதுடைய, லெஸ்லி கிலாஸ்டர் திசேரா வர்ணகுலசூரிய மற்றும் துலாஜ் நிலஞ்சன் திசேரா வர்ணகுலசூரிய ஆகியோரே மரணமாகினர்

முதலில் மகன் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு தந்தை முற்பட்ட போது அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »