Our Feeds


Thursday, July 6, 2023

ShortNews

BREAKING: சீமெந்து விலை அதிரடியாக குறைக்கப்பட்டது.



சிமெந்தின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இதன்படி சிமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டார். 


இதற்கிடையில், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் சில பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் வர்ணப்பூச்சிக்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், கட்டுமானத் துறையில் வேலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் குறைக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »