நாட்டில் நிலவும் வறட்சி நிலையுடன் விவசாய நிலங்களுக்கு மட்டுமின்றி குடிநீர் விநியோகமும் சவாலாக மாறியுள்ளது.
11 மாவட்டங்களில் 49,867 குடும்பங்களை சேர்ந்த 163,111 பேர் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 மஹாவலி திட்டத்தின் 42 இன் நீர் கொள்ளளவு 30% ஆகக் குறைந்துள்ளது.
அதேநேரம் நாடளாவிய ரீதியில் இயங்கிவரும் 344 நீர் விநியோக அமைப்புக்களில் 20ல் முழு நேர நீர் விநியோகம் நிறுத்தப்பட்டு பகுதி நேர அடிப்படையில் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை நேற்று (12) அறிவித்துள்ளது.
குருணாகல், ஹெட்டிபோல, நிகவரெட்டிய வாரியபொல, மாத்தறை -ஊருபொக்க, ஹம்பந்தோட்டை - பெலியத்த முருதவெல, தங்காலை, வலஸ்முல்ல, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில், மொனராகலை - பிபிலை, அம்பகஸ்துவ, பண்டாரவளை, போகஹகும்புர, ஹல்தமுல்லை, கந்தகெட்டிய, சீலதெட்டிய, அமுனுகெலே, கெப்பட்டிபோல ஆகிய நீர் வழங்கல் அமைப்புகள் இவ்வாறு பகுதி நேர அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.