வாழைச்சேனை ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபிக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
யுத்தத்தின் போது உயிரிழந்த 187 முஸ்லிம் பிரஜைகள், ஆயுதப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய நினைவத்தூபியே தீ வைத்து எரிக்கப்பட்டது.
நினைவுத்தூபிக்கு அருகே சாக்கு மூட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
தீயை பார்த்த இரு வணிகர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
தீயினால் நினைவுத்தூபியின் கீழ்ப் பகுதியின் இரண்டு பக்கங்களும் கருகிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்