Our Feeds


Monday, September 4, 2023

Anonymous

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய பல முக்கிய தகவல்களை வெளியிடவுள்ள பிரித்தானியாவின் CHANNEL 04



2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிடுவதற்கு பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் செனல் 04 (CHANNEL 04) ஊடகம் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதன்படி, நாளைய தினம் இந்த தகவல்கள் ஒளிபரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங்ஸ் டிஸ்பேட்ச்சஸ் (SRI LANKA'S EASTER BOMBINGS DISPATCHES) என்ற பெயரில் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நேரப்படி இரவு 11.05 அளவிலும் இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 அளவிலும் இந்த தகவல் வெளியாகும் என சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »