காஸா பகுதியில் நேற்று (24) இரவு முதல் இன்று (25) வரை இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 714 பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்து இதுவே அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
