Our Feeds


Friday, October 20, 2023

ShortNews

அல்-ஜஸீரா சர்வதேச ஊடகத்திற்கு தடை விதித்தது இஸ்ரேல்!



பிரபல சர்வதேச செய்தி ஊடகமான அல்-ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூடவும், அதன் அனுமதியை ரத்து செய்யவும் இஸ்ரேல் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


பாலஸ்தீன அப்பாவி மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதல்களை உடனுக்குடன் அல்-ஜஸீரா பாலஸ்தீனத்திலிருந்தே வழங்கி வருவதுடன், காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான் என்பதை நேற்றைய தினம் பல வீடியோ ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டிய நிலையில் இஸ்ரேலின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »