Our Feeds


Sunday, October 22, 2023

ShortNews

பதுளை கொஸ்லந்தை பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாயம்



பதுளை கொஸ்லந்தை மீரியபெத்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் கே.என். பிரியங்கனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவுறுத்தலுக்கமைய, மண்சரிவு அபாயம் காரணமாக ஹப்புத்தளை சேர்வுட் தோட்டத்தை சேர்ந்த 27 குடும்பங்களுக்கு உட்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »