வைத்தியர்களின் போராட்டம் காரணமாக மருதானையில் சுகாதார அமைச்சுக்கு முன்னால் உள்ள ஒரு பாதை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், சுகாதார அமைச்சிலிருந்து நகர மண்டபம் வரையான வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
