இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்படும் இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹமாஸ் - இஸ்ரேல் மோதலையடுத்து இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்க அங்கு காணாமல் பொனதையடுத்து அவரை தேடும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் குறித்த நபரின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
