Our Feeds


Monday, October 9, 2023

ShortNews

இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையம் மீது ஹமாஸ் படை அதிரடி தாக்குதல்.



இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹமாஸ் படையினர் ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.


இஸ்ரேலியின் பிரதான விமான நிலையமான பென்குரியன் விமான தளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.


பொதுமக்களின் வீடுகளை இலக்கு வைத்தல் உட்பட ஏனைய குற்றங்களிற்காக இந்த தாக்குதலை மேற்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.


இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நகரமான அஸ்கெலென் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.


100க்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »