Our Feeds


Saturday, October 21, 2023

ShortNews

PHOTOS: மனிதப் பேரழிவை நிறுத்து..! பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்.



காசாவில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டு வரும் யுத்த நெறிமுறைகளையும் மீறிய தாக்குதல்களினால் மிகப்பெரும் மனிதப் பேரழிவுக்கு ஆளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு நீதி வேண்டியும், இஸ்ரேலைக் கண்டித்தும் இன்று சனிக்கிழமை  (21) யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.


சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டு பாலஸ்தீன மக்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »