156 டொன் உதவிப் பொருட்களுடன் எகிப்தில்
வந்திறங்கிய 5 கத்தார் விமானங்கள்காஸா மக்களுக்கான மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட 156 டொன் உதவிப் பொருட்களுடன் கத்தார் அரசின் 5 இராணுவ விமானங்கள் எகிப்தை வந்தடைந்துள்ளதாக கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுவரை 26 விமானங்களில் மொத்தம் 879 டொன் உதவிகளை கத்தார் காஸா மக்களுக்காக அனுப்பியுள்ளது.
