ஜோர்தானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 200 இலங்கையர்கள் விசா நீடிக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது ஜோர்டானின் சஹாப், அல் ஜுமாத் இண்டஸ்ட்ரியல் சிட்டியில் உள்ள அசீல் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
விசா நீடிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் தற்போது எதிர்நோக்கி வருவதாக இலங்கையர்கள் ஊடகத்திற்கு தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.