Our Feeds


Wednesday, November 15, 2023

SHAHNI RAMEES

தந்தையின் இறப்புச் சான்றிதழைப் பெற சென்ற 21வயது மகனுக்கு நிகழ்ந்த சோகம்..!

 

உயிரிழந்த தந்தையின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளச் சென்ற உயிரிழந்தவரின் மகன் பயணித்த மோட்டார் சைக்கிள் புலத்சிங்கள பஹல நாரகல பிரதேசத்தில் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த ரந்திக பியூமல் கமகே என்ற (21) வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக புலத்சிங்களவில் இருந்து ஹொரணைக்கு பயணித்துள்ளார்.

 

இவ்வாறு பயணித்த போது நரகல பகுதியில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »