Our Feeds


Thursday, November 9, 2023

SHAHNI RAMEES

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் 9 ஆண்டுகளின் பின் ஒருவருக்கு மரண தண்டனை

 

பெண்​ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  

  

மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை கைது செய்தனர்.  

 

அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி, அந்த பெண், இறுதியாக வைத்திருந்த தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர். 

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்குக்கான தீர்ப்பை, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் இன்று வழங்கினார்.

 

தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதோடு, குற்றவாளியின் இறுதிக் கருத்தும் கேட்கப்பட்டது. தான் நிரபராதி என்றார். அதன்பின்னர், நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டன. அதன்பின்னர், தீர்ப்பின் கீழ் கையொப்பமிட்டு, பேனையை நீதிபதி உடைத்து வீசினார்.

 

 கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

 

ஒன்பது வருடங்களின் பின்னர், இன்று வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »