Our Feeds


Monday, November 27, 2023

ShortNews

மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து மகிழ்ச்சியான செய்தி



நாட்டில் 8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை வழங்குவதற்காக 3000 ரூபா பெறுமதியான வவுச்சர்களை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் இன்று ஹேஷா விதானகே முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனை கூறினார்.


பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்கள் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி ஆரம்பித்து 27ஆம் திகதி நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுள்ளது.


கஷ்ட, பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் நான்கு இலட்சத்து ஏழாயிரம் பிள்ளைகளுக்கும் (407,000) இவ்வாறே வவுச்சர் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவத்தார்.


அடுத்த வருடத்தில் மேலும் ஒதுக்கீடுகளைப் பெற்று, அதிகளவான எண்ணிக்கையில் இவ்வவுச்சர்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »