ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.25 மணிக்கு பைசாபாத் அருகே ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
