உடன் அமுலுக்குவரும் வகையில் 8, 9 மற்றும் 10ம் திகதிகளில் அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தபால் மாஅதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அனைத்து தபால் ஊழியர்களும் இன்று நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பொன்றை ஆரம்பிக்க தீர்மானித்ததாக ஒன்றிணைந்த தபால் தொழில்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறை ரத்து செய்ய தபால் மாஅதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
