ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே (Javier Milei) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஆர்ஜென்டினாவில் நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி அவர் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜேவியர் மில்லேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.