வெல்லம்பிட்டிய, வெஹெரகொட கனிஷ்ட கல்லூரியில் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் சரிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஷெஹன்சா நிட்சராணி என்ற ஆறு வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
ஷெஹன்சாவின் ஆறாவது பிறந்தநாள் இன்று எனவும், பாடசாலையில் தனது தோழிகளுடன் கேக் வெட்டிய ஷெஹன்சா, கை கழுவுவதற்காக தண்ணீர் குழாயில் சென்று விபத்தை சந்தித்ததாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த கம்பம் விழுந்ததில் 6 மாணவர்கள் காயமடைந்தவர்களில் ஷெஹன்சாவும் இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அதிபரை தாக்கியதில் அவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.