காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,200ஐ கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,248ஆக அதிகரித்துள்ளதுடன், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் மேலும் 7,600க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
