Our Feeds


Thursday, December 7, 2023

ShortNews Admin

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படுமா?



‘யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விரும்பாத காரணத்தால் இம்முறை யாழ். மாவட்டத்தில் இருந்து எவரும் தெரிவு செய்யப்படவில்லையென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .


2022ஆம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத் தெரிவு விபரம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் யாழ்.மாவட் டத்தில் பொறியியலில் கற்பதற்கு தகுதியுள்ள அனைவரும் தென்பகுதி பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்ததன் காரணமாக எவரும் யாழ். பல்கலைக்கழகத்தினை விருப்பத் தேர்வாக கொள்ளாத காரணத்தால் எவரும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.


மிகுந்த சிரமத்தின் மத்தியில் 1990களில் அனுமதி பெறப்பட்டு 2010களில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடம் யாழ். மாணவர்கள் பயன் பெறவேண்டுமென்ற நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அப்பீடத்தில் கல்வி கற்க மாணவர்கள் விரும்பாதது வேதனையான விடயமாகும். அது மட்டுமல்ல, பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை சொந்த மண்ணிலேயே கல்விகற்பிக்க விரும்பாதது ஆச்சரியமான விடயமாகுமென புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »