அக்குரஸ்ஸ பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு நண்பர்களைச் சந்திப்பதற்காக கார் சாரதி குறித்த பகுதிக்கு சென்ற போது, கார் சதுப்பு நிலத்தில் சிக்கி முன்னோக்கிப் பின்னோக்கி நகர முடியாமல் போனது.
இந்நிலையில், வேகமாகத் திரும்பிச் செல்ல முற்பட்ட போது காரின் கதவு பூட்டுகள் அனைத்தும் பூட்டப்பட்டதாகவும், முன்பக்கத்தில் திடீரென பெரும் தீ பரவல் ஏற்பட்டதாகவும் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
