Our Feeds


Monday, January 22, 2024

News Editor

சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு


 கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொலிஸாரின் சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பஸ்களை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் பஸ் முன்னுரிமைப் பாதை சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

 

முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்கள் பஸ் பாதையில் பயணிப்பதால் பஸ்களை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிய போக்குவரத்து பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள CCTV நடவடிக்கை இன்று (ஜனவரி 22) முதல் அமுலுக்கு வருகிறது.

 

 

இதன்படி, கொழும்பில் உள்ள 33 முக்கிய இடங்களில் பொலிஸாரின் சிசிடிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர்.

 

முதல் நடவடிக்கையாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களின் அபராத சீட்டுகள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »