Our Feeds


Wednesday, January 17, 2024

ShortNews Admin

பாடசாலை ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்! - காரணம் என்ன?



அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை  வழங்கப்பட்டிருந்தது.

எனினும் உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும்  பகுதி 2 ஆகிய இரண்டையும் இவ்வருடம் மீள நடத்துவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானம் காரணமாக, தவணை ஆரம்பிக்கும் திகதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

விவசாய விஞ்ஞான வினாத்தாள் இரண்டாம் பாகம் வௌிப்படுத்தப்பட்டதை அடுத்து அதனை ரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

பின்னர் வினாத்தாளின் முதலாம் பாகத்தை இரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 1ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 முதல் 11.40 வரை மீண்டும் நடைபெற உள்ளது.

முதல் பாகம் அதே நாள் பிற்பகல் 01.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »