சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் இடம் பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் தவணையை விடுவிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் கூறி னார்.
பெறுமதி சேர் வரி அறவிடப்படும் வர்த்தகர்க ளிடமிருந்து கட்டாயமாக அவர்களின் வரி செலுத்துனர் அடையாள இலக்கத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிலர் அரசாங்கத்திற்கு வரி செலுத்தாது, அதிகரிக்கப்பட்டுள்ள வரியை தமது இலாபமாக வைத்துக்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.