Our Feeds


Tuesday, March 26, 2024

ShortNews Admin

பொஹொட்டுவவிற்கு 05 ஜனாதிபதி வேட்பாளர்கள்..!


பொதுஜன பெரமுனவில் தற்போது வரையில்

நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


ஒரு பிரதேச சபைக்கு கூட வேட்பாளர்களை காண முடியாது என்று கூறிய கட்சி இன்று பல ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும்

பொது வேட்பாளரை முன்வைக்க தாம் தயாராக இருப்பதாகவும் அந்த வேட்பாளர் யார் என்பதை கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கதை இவ்வாறு இருக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடக சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கையில்;

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக பதவியேற்க இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் பொது மக்களின் கருத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எவரும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »