Our Feeds


Friday, March 22, 2024

SHAHNI RAMEES

இணக்கமின்றி முடிவுற்ற பசில் – ரணில் சந்திப்பு...

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (21) இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.



இதன்படி எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாததால், எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மத்தியில் இருதரப்பு கருத்துக்கள் நிலவுவதால் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் மீண்டும் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் விரிவான கலந்துரையாடலில் அனைவரும் ஒரே கருத்தை முன்வைக்க முடியும் என கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »