வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பின்ஓய மேல் பகுதியில் உள்ள தோட்ட வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவனாவார்.
தோட்ட வீடொன்றில் விளையாடிக்கொண்டிருந்த இந்தச் சிறுவன் காணாமல்போயுள்ள நிலையில் சிறுவனின் தந்தையும் தோட்டத்தில் வேலை செய்பவர்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, சிறுவன் இந்த தோட்ட வீட்டின் பின்புறத்தில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.