Our Feeds


Friday, March 22, 2024

SHAHNI RAMEES

யாழை சென்றடைந்தார் ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இன்று வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார்.


பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். 


யாழ்ப்பாணத்தை  சென்றடைந்த  ஜனாதிபதி , கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாரின் சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கவுள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவையும் திறந்து வைக்கவுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »