Our Feeds


Sunday, April 14, 2024

SHAHNI RAMEES

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில் விபத்து : 6 பேர் காயம்..!


 பண்டாரவளை – கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


காலி பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற குழுவினர் பயணித்த வேனே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »