Our Feeds


Thursday, April 18, 2024

SHAHNI RAMEES

மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள் நாடு திரும்பினர்...

 


மியன்மார் மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை

தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியான்மாரில் இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக கடத்தப்பட்ட எட்டு இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டு, திருப்பி அனுப்பியது.


இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய , மியான்மார் சட்ட அமுலாக்க அதிகாரிகள் கடத்தப்பட்ட இலங்கையர்களை 2024, ஏப்ரல் 4 அன்று மீட்டனர்.


மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பானது, ஏற்பாட்டில் தொடர்பிலான உதவிகளை வழங்கியது. கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம், மியான்மரை தளமாகக் கொண்ட ஈடன் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், மியாவாடி காவல் நிலையத்தில் அவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்தபோது அவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்கியது.



வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் மற்றும் இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) உட்பட்ட ஏனைய பங்காளர்களுக்கு, இவ்விடயத்தில் வழங்கிய உதவிகளுக்கு, தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »