Our Feeds


Monday, April 8, 2024

ShortNews

ஐ.சி.சி.இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ் தேர்வு..!


 சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

அதன்படி மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளரான மார்க் ஆடிர், இலங்கை அணியை சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


இவர்களில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியை சேர்ந்த கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அவுஸ்திரேலிய சகல ஆட்டக்காரரான ஆஷ் கார்ட்னர், இங்கிலாந்து பேட்ஸ்மேனான மாயா பவுஷிர் மற்றும் நியூசிலாந்து ஆல் ரவுண்டரான அமெலியா கெர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »