Our Feeds


Wednesday, April 24, 2024

ShortNews Admin

தமிழ் அரசுக்கட்சியின் நிருவாகத் தெரிவு பற்றிய வழக்கு விசாரணை - இன்று நடந்தது என்ன?



இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவு தொடர்பான வழக்கு இன்று (24) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கு மே மாதம் 31ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.

 

குறித்த வழக்கின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 


இவ் வழக்கிற்கு 7 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் 2ம்,4ம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோருக்கு சார்பாக ஆஜராகினேன். சுமார் மூன்று மணி நேரங்கள் இவ் வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடந்த பெப்ரவரி 15ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை . குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன.


 

இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம் ஆனால் காலம் செல்லும். இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில் வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும் .வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்க தயாராக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்க வேண்டும் .வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன் என்றார்.


 

அப்துல் ஸலாம் யாசீம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »